மக்களவை 3-ஆம் கட்ட தேர்தல் - 9 மணி நிலவரப்படி 10.57% வாக்குகள் பதிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குஜராத், அசாம் உள்ளிட்ட 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 மக்களவை தொகுதிகளுக்கான 3-வது கட்ட வாக்‍குப்பதிவு காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏராளமான மக்‍கள் ஆர்வத்துடன் வாக்‍களித்து வருகின்றனர். 

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலில் முதல் கட்டமாக கடந்த மாதம் 19-ம் தேதி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. தொடர்ந்து இரண்டாவது கட்டமாக கடந்த 26-ம் தேதி 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.  

இதையடுத்து 3-ம் கட்டமாக குஜராத், பீகார், சத்தீஸ்கா், கோவா உள்ளிட்ட 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 தொகுதிகளுக்கு இன்று வாக்‍குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 17 கோடியே 24 லட்சம் வாக்‍காளர்கள் வாக்‍களிக்‍க வசதியாக ஒரு லட்சத்து 85 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்‍கப்பட்டு உள்ளன. 

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை வாக்‍குப்பதிவு நடைபெற உள்ளது. காலை முதலே வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.

இத்தேர்தலில் 120 பெண் வேட்பாளர்கள் உள்படமொத்தம் ஆயிரத்து 351 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா, சமாஜ்வாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ், மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாவர்.

வரும் 13-ம் தேதி, 20 மற்றும் 25 ஆம் தேதி ஜூன் 1 ஆம் தே​திகளில் மேலும் 4 கட்ட தேர்தல் நடைபெற உள்ளன. அனைத்து 7 கட்ட தேர்தல்களில் பதிவாகும் வாக்‍குகள் வருகிற ஜூன் 4 ஆம் தேதி எண்ணபட்டு தேர்வு முடிவுகள் அறிவிக்‍கப்பட உள்ளன. 

Night
Day